Ad Code

Responsive Advertisement

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 'சுவாதி ஆப்' என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன்: விரைவில் அறிமுகம்.

ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 'சுவாதி ஆப்' என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை ரயில்வே பாதுகாப்பு படை அறிமுகப்படுத்த உள்ளது.

கொலை செய்யப்பட்ட சுவாதி பணிபுரிந்த இன்போசிஸ் நிறுவனமும் ரயில்வே பாதுகாப்பு படையும் இணைந்து இந்த ஆப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ரயிலில் பயணிக்கும் பெண்கள் தங்களுக்கு ஆபத்து நிகழும் நேரத்தில் இந்த அப்ளிகேஷனில் உள்ள sos பட்டனை அழுத்தினால் உடனடியாக அந்த தகவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகிலுள்ள ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டு வருகிறது.டில்லியில் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்ட நிர்பயாபெயரில் பெண்கள் பாதுகாப்பிற்காக ஒரு மொபைல் அப்ளிகேஷன் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement