Ad Code

Responsive Advertisement

பி.இ. கலந்தாய்வு: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இசிஇ பிரிவு

பொறியியல் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடங்கி ஒரு வார காலம் முடிவடைந்த நிலையில், அதிக மாணவர்களின் விருப்பப் பிரிவாக மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தப் பிரிவை இதுவரை 4,331 மாணவ, மாணவிகள் தேர்வு செய்துள்ளனர்.


பொதுப் பிரிவினருக்கு சேர்க்கை ஜூலை 21-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

ஒரு வார காலம் முடிவடைந்துள்ள நிலையில், அழைக்கப்பட்ட 26,273 பேரில் 19,117 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். 7,081 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. கலந்தாய்வில் பங்கேற்ற 75 பேர் இடங்களைத் தேர்வு செய்யவில்லை.

சேர்க்கை பெற்றவர்களில் 4,331 பேர் இசிஇ பிரிவையும், பி.இ. கணினி அறிவியல் பிரிவை 3,167 பேரும், பி.இ. இயந்திரவியல் பிரிவை 3,102 பேரும் தேர்வு செய்திருக்கின்றனர்.

பி.இ. கட்டடவியல் தமிழ்வழி படிப்பை 45 பேரும், பி.இ. இயந்திரவியல் தமிழ்வழி படிப்பை 44 பேரும் தேர்வு செய்திருக்கின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement