Ad Code

Responsive Advertisement

சுவாதி கொலை வழக்குக் குற்றவாளி நெல்லையில் கைது

கடந்த 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படு கொலை செய்யப்பட்டார் சுவாதி என்ற தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்.
பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த அந்தக் கொலை வழக்கில் கொலையாளி நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளான்.


செங்கோட்டை மீனாட்சிபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்து இன்னமும் முடிக்க முடியாமல் இருக்கும் 24 வயது ராம்குமார், (தந்தை பெயர் பரமசிவம்) சுவாதி கொலை தொடர்பாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். ஆலங்குளம் கல்லூரியில் படித்தவன். தந்தை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாராம். ராம்குமார் சென்னையில் வேலை தேடி வந்தவன்.
சென்னை சூளைமேட்டில் சுவாதியின் வீட்டருகில் கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்தானாம் அவன். ஒருதலைக் காதல் காரணமாகவே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் கொலையாளியின் புகைப்படத்தை வைத்து விசாரித்த போது ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனின் காவலாளி ராம்குமார் குறித்த தக்வல்களைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதை அடுத்து செங்கோட்டையில் வீடு வீடாக நடத்தப்பட்ட சோதனையில் அவன் தாத்தா வீட்டில் பதுங்கியிருந்த போது சிக்கியுள்ளான்.
நேற்று கைதுக்கு முன்பு நான்கு ஆடுகளை மேய்த்து விட்டு மாலை ஆறு மணி அளவில் வீடு திரும்பி சாப்பிட்டுப் படுத்திருக்கிறான்.
இரவு வரை பொறுத்திருந்த காவல்துறையினர் சுமார் 10.05 மணியளவில் காவல்துறையினர் உள்ளே புக முயற்சித்த போது அங்கிருந்த நாய்கள் குரைத்திருக்கிறது.
ப்ளேடு
யாரோ புதிய நபர்கள் வந்திருக்கிறார்கள். காவல்துறையினராகத்தான் இருக்க வேண்டும் என்பதை யூகித்த ராம்குமார் வீட்டின் பின்பக்கம் படுத்திருந்தவன் உள்ளே ஓடி கையில் கிடைத்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றிருக்கிறான்.
சுவாதியைக் கொலை செய்ததாக ராம்குமார் ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்று தற்போது பாளையங்கோட்டை  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் ராம்குமார்.
மருத்துவமனையைச் சுற்றிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அவனுடைய உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவர்கள் அனுமதி கிடைத்தவுடன் அவன் சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
காலை பத்து மணிக்கு சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.
ராம்குமார் தங்கியிருந்த சூளைமேடு செளராஷ்டிரா நகர் எட்டாவது தெருவில் உள்ள மேன்ஷனில் உள்ளவர்களை வெளியேறக்கூடாது என்று காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். ராம்குமாருடன் மேன்ஷனில் தங்கியிருந்த 50 வயது மதிக்கத்தக்க நபரைக் காணவில்லையாம்.
”கழுத்துப் பகுதியில் ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்தது. ராம்குமார் இன்னமும் தீவிர சிகிச்சைப்பிரிவில் தான் இருக்கிறான். பேச முடியாத நிலையில் தான் உள்ளான். பேசவும் அனுமதி இல்லை. உடல்நலம் தேறிய பிறகே சென்னை அழைத்து செல்ல அனுமதிப்போம். நிலைமை சீரடைய ஓரிரு நாட்கள் ஆகலாம்” என்று  நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சித்தி அத்தியமுனவரா கூறியிருக்கிறார்.
கொலையாளி கைது செய்யப்பட்ட அவனது தாத்தாவின் வீடு :
ராம்குமார் வீடு

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement