Ad Code

Responsive Advertisement

முன்னாள் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணிபுரிந்து, 2013ம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலம், 1.18 லட்சம் பேர் பயனடைவர்.


'பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 2013 ஜூன், 10ம் தேதிக்கு முன், பணி ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்' என, நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. அந்த தேதிக்கு பின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும், 'பார்முலா'வில் மாற்றம் செய்யப்பட்டதால், கூடுதல் தொகை கிடைத்து வருகிறது. சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.


அதன் மூலம், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் சமமான அளவில் ஓய்வூதியம் கிடைக்கும். இதன் மூலம், 1.18 லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயன் அடைவர். இதன் மூலம், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு, குடும்ப ஓய்வூதியர்களின், 24 கோடி ரூபாய் உட்பட, 155 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். இதுதவிர, பயனாளிகளுக்கு பின்தேதியிட்டு நிலுவைத்தொகை வழங்க, கூடுதலாக, 284 கோடி ரூபாய்
செலவாகும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement