Ad Code

Responsive Advertisement

விடைத்தாள் திருத்தத்தில் தவறு : ஆசிரியர்களுக்கு தண்டனை இல்லை.

ஆசிரியர் சங்கங்களின் நெருக்கடியால், விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்த ஆசிரியர்கள் மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்தல், விடைத்தாள் திருத்தம், தேர்வறை கண்காணிப்பு பணி, தேர்வு மைய ஆய்வுப் பணி போன்ற அனைத்திலும், அரசு பள்ளிஆசிரியர்களே பெரும்பாலும் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் முடிந்த பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் போன்றவற்றில், பல மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மாறியுள்ளன. பிளஸ் 2 தேர்வில், 2,278 பேரும், 10ம் வகுப்பு தேர்வில், 450 பேரும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எனவே, இந்த விடைத்தாள்களைதிருத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தேர்வுத் துறை முடிவு செய்து, அவர்களின் பட்டியலை தயாரித்தது.

இதையறிந்த ஆசிரியர் சங்கங்கள், போராட்டம் நடத்துவோம் என, தகவல் அனுப்பின. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல், சம்பந்தப்பட்ட விடைத்தாள் மைய கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அதிகாரி, மண்டல பொறுப்பு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என, நெருக்கடி கொடுத்தன. இதையடுத்து, ஆசிரியர்கள்மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement