Ad Code

Responsive Advertisement

இனி 8ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' இல்லை : சிறுபான்மை பள்ளியிலும் இலவச சேர்க்கை

மத்திய அரசு சார்பில், இரண்டு ஆண்டுகளாக புதிய தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் பல மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டு, இறுதி செய்யப்பட்ட வரைவு கொள்கையை முதன் முதலாக, மத்திய அரசு, பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது.

அதிலுள்ள முக்கிய அம்சங்கள்:

* தொடக்க கல்விக்கு முந்தைய, பள்ளிக்கு தயார்படுத்தும் வகுப்புகள், இனி அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படும். இந்த திட்டம், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக உதவியுடன் செயல்படுத்தப்படும்
* அங்கன்வாடி மையங்கள், தொடக்கப் பள்ளி வளாகங்கள் அல்லது பள்ளிகளுக்கு அருகில் செயல்பட, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு பள்ளிக்கு குழந்தைகளை தயார்படுத்தும் பயிற்சி அளிக்கப்படும்
* மாணவ, மாணவியர் இடையே பாலின பாகுபாட்டை போக்குதல்; பிரம்பால் அடித்து துன்புறுத்துதலுக்கு தடை; உடல் ரீதியான தண்டனைக்கு தடை; பாகுபாடு இல்லாத மாணவ, மாணவியர், குழந்தைகளை அவர்கள் வழியில் பழகி பயிற்றுவித்தல் போன்ற சில விதிகள் வகுக்கப்படும். இந்த விதிகளை பின்பற்றுவதை, பள்ளிகளுக்கான அங்கீகார விதிகளில் ஒன்றாக கொண்டு வரப்படும்
* இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 8ம் வகுப்பு வரையிலான, 'ஆல் பாஸ்' திட்டம் மாற்றப்பட்டு, 5ம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்கள் பெயிலாக்கப்படாமல், தேர்ச்சி பெற செய்யப்படுவர். அதேநேரம் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, இனி, கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, ஜெயின் போன்ற சிறுபான்மை பள்ளிகளும், இலவச மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement