Ad Code

Responsive Advertisement

CPS ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு பதவி காலம் 3 மாதம் நீட்டிப்பு

'பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில், ஐந்து பேர் குழுவை, பிப்., 26ல், அரசு அமைத்தது. அந்தக் குழு, மார்ச், 28ல் கூடியது. 


ஆனால், அதன் உறுப்பினர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியம் பங்கேற்கவில்லை. இதற்கிடையில், 'எங்களிடம் கருத்து கேட்க வேண்டும்' என, அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், குழுவினர் சந்திக்கவில்லை.சட்டசபையில், இதுகுறித்து நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'வல்லுனர் குழு அறிக்கை அளித்ததும் முடிவு செய்யப்படும்' என்றார்.


அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், 'குழுவில், இருவர்
பதவியை ராஜினாமா செய்து விட்டனரே; குழு எப்படி கூடும்' என, கேள்வி எழுப்பினார். அதற்கு மறுநாள் பதிலளித்த அமைச்சர் பன்னீர்செல்வம், 'வேறு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர்' என்றார்.அதன்படி, வல்லுனர் குழுவை மாற்றி அமைத்தும், குழுவின் பதவி காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்தும், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


உறுப்பினர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியத்திற்கு பதிலாக, 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' நிறுவன பேராசிரியர் பிரிஜேஷ் சி புராகித், உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement