அரசு துறைகளில் தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, 481 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த, 2013 - -14 மற்றும் 2014- - 15ம் ஆண்டுக்கான, குரூப் - 4 பதவிகளில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு, 314 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., மூலம் 2014 டிச., 21ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன், 15 முதல், 17ம் தேதி வரை, சென்னையில் நடக்கும்.இதற்கு தேர்வு செய்யப்பட்ட, 481 விண்ணப்பதாரர்களுக்கு தபாலில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இணைய தளத்திலும் பட்டியலை அறிந்துகொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை