Ad Code

Responsive Advertisement

அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு, தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் உதவித்தொகை பெற உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.


அரசு, உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

 முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கிக்கணக்கு எண், ஆதார் எண் விவரங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement