Ad Code

Responsive Advertisement

பேருந்தில் ஃபுட்போர்டு அடித்தால் இலவச பஸ்பாஸ் ரத்தாகும்: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை!

பேருந்து படிகட்டில் ஃபுட்போர்டு அடித்துச் செல்லும் பள்ளி மாணவர்கள் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

பள்ளி மாணாக்கர் தொடர்ந்து பேருந்துகளில் ஃபுட்போர்டு அடித்துச் சென்றால் அவர்களது இலவச பேருந்து பயண சலுகை ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், முதல் முறையாக பேருந்துகளில் புட்போர்டு அடிக்கும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை விடுக்கும்படி பள்ளி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து பேருந்தில் ஃபுட்போர்டு அடிக்கும் மாணவர்களின் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்பட்டு, அந்த மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement