சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற மாணவர்கள் திங்கள்கிழமைக்குள் (ஜூன் 6) விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப் பதிவாளர் பி.டேவிட் ஜவகர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும் வகையில் 2011-ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும், சுயநிதிக் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஆதரவற்ற, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
மேலும், முதல் தலைமுறை மாணவர்கள், கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட பெண்ணின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாணவர்கள் இதற்கான விண்ணப்பத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திங்கள்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை