Ad Code

Responsive Advertisement

பயிற்றுநர்களுக்கான பயிற்சி தொடக்கம்

மத்திய கல்வி, ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), தமிழக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவை சார்பில் பயிற்றுநர்களுக்கான 5 நாள் பயிற்சி சென்னை டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தப் பயிற்சியைத் தொடக்கிவைத்து என்சிஇஆர்டியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரஞ்ஜனா அரோரா பேசியதாவது:


என்சிஇஆர்டி சார்பில் கற்பித்தலைத் தாண்டி, கணிதம், அறிவியல் பாடக் கருத்துகளை மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளச் செய்வதற்கான திட்டக் கருத்துரு தயாரிக்கப்பட்டு, தேசிய பயிற்சியாளர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் முதல்முறையாக ஆர்எம்எஸ்ஏவுடன் இணைந்து இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு ஆசிரியர் இந்தப் பயிற்சியைப் பெற்று, அவர்கள் மற்ற ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிப்பார்கள். முக்கியப் பாடங்களை செய்முறை மூலம் கற்பிக்கும்போது மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் தங்கள் மாவட்டத்தில் அளிக்கும் பயிற்சி குறித்தும், பயிற்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விரிவான கருத்துக்கள் ஆர்எம்எஸ்ஏவிடம் பெறப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாநில ஆர்எம்எஸ்ஏ இயக்குநர் ஜி. அறிவொளி, துணை இயக்குநர் வி.குமார், என்சிஇஆர்டி பேராசிரியர் வி.வி.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement