Ad Code

Responsive Advertisement

பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 1) திறக்கப்பட உள்ளன. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு மே 1-ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
 


கோடை வெப்பத்தின் காரணமாக, பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டவாறு ஜூன் 1-இல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
 


முன்னதாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதல் பருவத்துக்கான புத்தகங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன.
 


இந்தப் பொருள்கள் எந்தவிதப் பிரச்னையும் இன்றி விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முன்னதாகவே தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வலியுறுத்தியுள்ளார்.
 


பல மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஜூன் 6-ஆம் தேதியும், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஜூன் 8-ஆம் தேதியும் திறக்கப்பட உள்ளன.
 


கல்வி உதவிகள் முதல்வர் இன்று தொடக்கிவைப்பு: இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார் என்றும் இதையடுத்து மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் கல்வி உதவிகள் வழங்கப்படும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement