Ad Code

Responsive Advertisement

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் 10, 12-ம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாத 2 மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித்தகுதிகளோடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள், பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும் இருக்க வேண்டும். 

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50.000–க்கு மிகாமலும் 40 வயதிற்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும் மற்றும் தனியார் அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபடாமல் அரசு நிர்ணயித்துள்ள இதர தகுதிகளுக்கு உட்பட்டவராகவும் இருப்பவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் அரசின் உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் சென்னை – 35 நந்தனம் தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 2 மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் சென்னை – 4 சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெறலாம்.

மேலும் மாற்றுத்திறனாளிகளை பொறுத்த அளவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர்ப்பதிவேட்டில் உள்ளவர்கள் சென்னை – 32 கிண்டி மகளிர் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம்.

ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் உதவித்தொகை எண் ஆகிய விபரங்களுடன் நேரில் சமாப்பிக்க வேண்டும்.மேற்கண்ட அலுவலகங்களில் விபரங்களை பெற்று மாவட்டத்திலுள்ள வேலைவாய்ப்பற்றோர் விண்ணப்பித்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement