Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் பணி வழங்க கோரிமுதல்வர் அலுவலகத்தில் மனு.

இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க வேண்டும்' என, பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள்சங்கம் சார்பில், முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த, 1992 - 94ல் அங்கீகாரம் வழங்கப்பட்ட, தனியார் ஆசிரியர் பள்ளியில் படித்தவர்கள், நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்பட்டு, மீண்டும், 2002 - 2004ல் உங்களின் உத்தரவால், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படித்தோம். எங்களில், 200 பேர் இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும், இதுநாள் வரை வேலைகிடைக்கவில்லை.இது தொடர்பாக, 2011ல் தங்களை சந்தித்து, மனு கொடுத்துள்ளோம். எங்களுக்கு சிறப்பு அரசாணை மூலம், இடைநிலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement