குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து புகார் செய்ய புதிய, 'செயலி' (மொபைல் ஆப்) உருவாக்கப்பட்டு, தமி-ழகம் முழு-வதும், 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில், 'சைல்டு வாய்ஸ்' என்ற அமைப்பு செயல்படுகிறது. குழந்தை தொழிலாளர், குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்தல், குழந்தை திருமணம் போன்ற அவ-லங்-க-ளுக்கு எதி-ராக, இந்த அமைப்-பு போராடி வருகிறது.இந்த அமைப்-புடன் அருணோதயா, வேர்கள், ஜீவஜோதி, வைகை டிரஸ்ட், காருண்யா காப்பகம், புகையிலைக்கு எதிராக குழந்தைகளை காத்தல் போன்ற அமைப்புகள் இணைந்து, சி.ஆர்.எம்., (சைல்டு ரைட்ஸ் மானிட்டர்), 'செயலியை' உருவாக்கின. இச்செயலியில் உறுப்பினராகி, டி.ஜி.பி., அலுவ-ல-கம், குழந்தைகளுக்கான, 'ஹெல்ப் லைன்' (1098), குழந்தைகள் நல வாரியம், மாநில குழந்தைகள் நல காப்பகம் ஆகி-ய-வற்றுக்-கு புகார்களை தெரி-விக்க முடி-யும்.இதன்- மூலம் அந்-தந்-த மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,க்கள் நடவடிக்கை எடுப்பர். இச்செயலி மூலம் புகார் கொடுத்து, தமிழகம் முழுவதும், 100க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
'சைல்டு வாய்ஸ்' நிர்வாக அறங்காவலர் அண்ணாதுரை கூறியதாவது: இச்செயலி மூலம் புகார்கள் மாநில தலைமை இடத்திற்கு செல்வதால், மாவட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இச்செயலியை, 'யுனிசெப்'பின் தமிழக அதிகாரி, கடந்த பிப்ரவரியில் துவக்கி வைத்தார். புகார் கொடுப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். தவறானதகவல்கள் கொடுத்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை