Ad Code

Responsive Advertisement

B.Ed வினாத்தாள் மாற்றம்: மாணவர்கள் அதிர்ச்சி

பி.எட்., படிப்புக்கான, முதலாம் ஆண்டு உளவியல் தேர்வில், வினாத்தாள் முறை மாற்றப்பட்டு இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பி.எட்., பட்டப் படிப்பு, இந்த ஆண்டு முதல், ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டு உள்ளது. மத்திய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி,புதிய பாடத்திட்டமும் அமலுக்கு வந்துள்ளது.

இந்த ஆண்டு, புதிய பாடத்திட்டத்தின் கீழ், 60 ஆயிரம் பேர், 650 கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இவர்களுக்கான முதலாம் ஆண்டு பருவத்தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாளில், அனைத்து மாணவர்களுக்கும் பொதுவாக உளவியல் தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில் ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி, 70 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். அதில், இரண்டு மதிப்பெண்களுக்கு, 10 கேள்விகள்; ஐந்து மதிப்பெண்களுக்கு, ஆறு கேள்விகளில், நான்கு கேள்விகள்; 10 மதிப்பெண்களுக்கு, ஆறு கேள்விகளில், மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.ஆனால், நேற்று வழங்கப்பட்ட வினாத்தாளில் இந்த முறை மாற்றப்பட்டு இருந்தது. 



இரண்டு மதிப்பெண்களுக்கு, ஐந்து கேள்விகள்; ஐந்து மதிப்பெண்களுக்கு, எட்டு கேள்விகள் வழங்கப்பட்டு, அவற்றில் ஆறு கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டியிருந்தது.மூன்றாவது பிரிவில், முன்னர் இருந்த, 10 மதிப்பெண்களுக்கு பதில், தற்போது, 15 மதிப்பெண்களுக்குஒரு கேள்வி என, 'சாய்ஸ்' அடிப்படையில் நான்கு கேள்விகள் இடம் பெற்று இருந்தன.இந்த வினாத்தாளை பார்த்ததும், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே, திட்டமிட்டு படித்த முறைக்கு மாறாகவினாத்தாள் இடம் பெற்றதால், பல மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவரா என்ற அச்சம் எழுந்துள்ளது.



முன்னறிவிப்பு இல்லை
பாடத்திட்டம் மாற்றப்பட்ட பின், தேர்வில் மாற்றம் இருக்கும் என்பது குறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலை எந்த முன்னறிவிப்பும் செய்யவில்லை. மாதிரி வினாத்தாள் கொடுத்து இருந்தால், மாணவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்பட்டு இருக்காது. வரும் தேர்வுகளிலாவது பழைய வினாத்தாள் முறையை கொண்டு வர வேண்டும். உளவியல் தேர்வை பழைய முறைப்படி மீண்டும் நடத்த வேண்டும்.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement