Ad Code

Responsive Advertisement

ஒரு AEEO எப்படி இருக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சொன்னவை இவை.

1. எங்களைத் திட்டக் கூடாது

2. எங்களுக்குத் தெரியாததை நன்றாக சொல்லித்தர வேண்டும்


3.ஒன்றியத்தை ஒற்றுமையாக (தலைமையாசிரியர்-ஆசிரியர்) வைத்து             கொள்ள வேண்டும்


4. நல்லவராக இருக்க வேண்டும்


5. எங்கள் அலுவலகத்திலேயே இருக்க வேண்டும்


6. ஜாதி-மத- இன வேறுபாடு ஆசிரியர்களிடையே காட்டக்கூடாது.


7. புது புது நுட்பங்களை சொல்லி தர வேண்டும்


8.மிலிட்டரி ஆபிசர் போல புது ஆசிரியர்களிடம் கெத்து காட்டக் கூடாது.


9.எங்களோடு கலகலப்பாக இருக்க வேண்டும்


10. எங்கள் AEEO எந்த தப்பும் பண்ணக்கூடாது11. பள்ளி பார்வைக்கு வரும் போது டூவீலர் எடுத்துக் கொண்டு வா என ஆசிரியர்களிடம் கேட்கக் கூடாது.


12. எங்களோடு மகிழ்ச்சியாக கலந்துரையாடவேண்டும்


13. வகுப்பறையில் மாணவர்கள் முன் திட்டக் கூடாது.


14. எங்களை சுற்றுலாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.


15. எங்கள் AEEO மூத்த ஆசிரியர்களிடமும் எல்லாரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்


16. எங்களுக்கு கல்விப் பணியைத் தவிர பிற பணிகள் வழங்கக் கூடாது.


17. அடிக்கடி மெமோ கொடுப்பேனு மிரட்டக் கூடாது


18. எங்கள் குறைகளை உடனுக்குடன் களைய வேண்டும்.


19. எங்களை புரிந்து கொள்ள வேண்டும்


20. எங்களை பாதுகாக்க வேண்டும்


21 எங்கள் பணப்பயன் மற்றும் மேற்படிப்பு அனுமதிக்கு பணம் வாங்கக் கூடாது.


22. எங்களை BRT திட்ட அனுமதிக்கக் கூடாது.


23. அடிக்கடி very urgentனு சொல்லி தபால் கேட்கக் கூடாது.


24. அலுவலக வேலைக்கென்று ஒரு சில ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அவர்களை கெத்து காட்ட விடக்கூடாது.


25. Aeeo ஆபிஸ் அலுவலர்கள் ஆசியர்களிடம் கையூட்டு வாங்குவதை தடுக்க வேண்டும்


26.எங்கள் AEEOவிற்கு கெட்ட பழக்கம் இருக்க கூடாது.


27. SABL-ALM குறித்து முழுமையாக தெரிந்தவராக இருக்க வேண்டும்.


28.ஜால்ரா போடும் சங்கத்தினரை கூட வைத்துக் கொள்ளக் கூடாது.


29. எல்லா சங்கத்தினரையும் ஒற்றுமையாக தங்களது கருத்தைக் கேட்க அனுமதிக்க வேண்டும்.


30. அவருக்கு நாங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் தெரிந்தவராக இருக்க வேண்டும்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement