தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி தரம் சரிவர இல்லை என்பதால் தனியார் பள்ளிகளில் மாணவர்களை அதிக கல்வி கட்டணத்தையும் பொருட்படுத்தாமல் பெற்றோர்கள் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக ஏழை எளிய பெற்றோர்கள் கூட தங்களது சக்திக்கு மீறி கடன் பெற்றாவது தரமான கல்வி கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு முதல் உடை, காலணி, புத்தகங்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்வதற்கான ஆர்வத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகினறது. மேலும் தற்போது அரசு பள்ளி மாணவர்கள் பொது தேர்வுகளில் அதிக மதிபெண் பெற்று வருவதால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஒன்றாம் வகுப்பில் ஒரே நாளில் 54 மாணவ, மாணவிகள் சேர்த்து சாதனை படைத்துள்ளனர். இந்த தகவல் அனைத்து பகுதிகளிலும் தெரிவிக்கும் வகையிலும் அரசு பள்ளிகளில் தரமான கிடைப்பதால் மாணவர்கள் அதிகளவில் சேர வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கிராம கல்விகுழு, பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பின்னர் 54 மாணவர்கள் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு பாடம் கற்பிக்கபட்டது. இன்று ஒரே நாளில் மாணவர்கள் சேர்க்கபட்டு நடைபெற்ற துவக்க நிகழ்ச்சி அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சங்கரநாரயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்வி துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரே நாளில் 54 மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது மாவட்டத்தில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளியின் தரமான கல்வி கிடைப்பதை உணர்த்தும் வகையில் திருத்துறைப்பூண்டியில் பேரணியும் நடத்தப்பட்டது.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை