போலி சான்றிதழ் கொடுத்து,பணியில் சேர்ந்த ஆசிரியைக்கு,மூன்று ஆண்டு சிறை தண்டணை விதித்து,அரியலுார் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அரியலுாரை சேர்ந்தவர் தனபால் மனைவி ராஜாமணி, 36.இவர், 2000ம் ஆண்டு,மணக்கால் ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
பின்,அரியலுார்ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் துரை,ராஜாமணியின் கல்விசான்றிதழை சரிபார்த்த போது, அவை போலியானது என்று தெரியவந்தது.
இதுகுறித்து, அவர் அரியலுார் போலீசில் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து,அரியலுார் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மகாலெட்சுமி, நேற்று தீர்ப்பளித்தார்.அதில்,போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்ததற்காக, ராஜாமணிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டணை விதித்துதீர்ப்பளித்தார். பின், ராஜாமணி ஜாமினில் விடுதலையானார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை