தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தில் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 82.94 லட்சம் மனுதாரர்கள் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். இதில் உத்தேசமாக 45 லட்சம் மனுதாரர்கள், கடந்த 2011–ம் ஆண்டு முதல் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு பயின்ற மாணவர்கள்.
அவர்கள் தங்கள் கல்வித் தகுதியினைத் தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இம்மனுதாரர்கள் தங்களின் உயர்கல்வியினை தொடர்ந்து கொண்டிருப்பவர்களாக கருதப்படுவார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு, அரசுத் துறையில் 77 ஆயிரத்து 271 நபர்களும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 931 நபர்கள் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு உதவித் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 5.82 லட்சம் பதிவுதாரர்கள் 171.14 கோடி ரூபாய் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகையாக பெற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், தொழிலாளர் துறை ஆணையர் பி.அமுதா மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் சி.சமயமூர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை