Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் இன்று முதல் பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் படித்த பள்ளிகளில் திங்கள்கிழமை (ஜூன் 20) முதல் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளில் எடுத்து வர வேண்டும்.



பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் தெரியவில்லையெனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.



இதற்கான முகாம் வருகிற திங்கள்கிழமை (ஜூன் 20) முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை அந்தந்தப் பள்ளிகளில் நடைபெறும். பதிவு செய்யும் அனைவருக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.


இதுதவிர h‌t‌t‌p‌s://​‌t‌n‌v‌e‌l​a‌i‌v​a​a‌i‌p‌p‌u.‌g‌o‌v.‌i‌n​  என்ற வேலைவாய்ப்பகத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement