வரும்(ஜூன் மாதம்) 28ம் தேதி முதல் ரூ.251 விலையிலான 'பிரீடம் 251' ஸ்மார்ட்போன் விநியோகிக்கப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் 'பிரீடம் 251' என்ற பெயரில் ரூ.251க்கு மலிவுவிலை ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்ததது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலும் புகார் எழுந்ததை தொடர்ந்து, மத்திய அரசு விசாரணை வட்டத்தில் இந்நிறுவனம் தற்போது உள்ளது.
இந்நிலையில் ரிங்கிங் பெல் நிறுவனத்தின் இயக்குநர் மோஹித் கோயல் கூறியதாவது: வரும் 28ம் தேதி முதல் 251 ரூபாய்க்கு 'பிரீடம் 251' ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்படும். முதற்கட்டமாக முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே ஸ்மார்ட்போன் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
7 கோடி பேர் கேஷ் ஆன் டெலிவரி வகையிலும், 30 ஆயிரம் பேர் பணம் கொடுத்தும் இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை