Ad Code

Responsive Advertisement

10 ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2 க்கு இணையாக சான்றிதழ் மத்திய அமைச்சர் தகவல்

“10 ம் வகுப்பு முடித்து விட்டு ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் பிளஸ் 2 முடித்ததற்கு இணையாக சான்றிதழ் வழங்கப்படும். நேரடியாகஉயர் கல்விக்கு செல்ல முடியும். இந்த புதிய திட்டம் குறித்து ஜூலை 15 ல் பிரதமர் நரேந்திர மோடிஅறிவிப்பார்”என, திறன் மற்றும் தொழில் முனைவோர் துறை மத்திய இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.


துாத்துக்குடிக்கு வந்த மத்திய இணையமைச்சர் தெரிவித்தாவது: மாநிலங்களில் ஐ.டி.ஐ., தொழில் படிப்பு படிக்கும் மாணவர்கள், மத்திய அரசின் என்.சி.வி.டி., கட்டுப்பாட்டின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 18 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.


இவர்கள் 8 ம் வகுப்பு முடித்து விட்டு ஐ.டி.ஐ.,யில் இரண்டு ஆண்டு படித்தால், அவர்கள் தங்களது உயர் படிப்பினை தொடர விரும்பும் போது ,10ம் வகுப்பு முடித்தவர்களாக கணக்கில் கொள்ளப்பட்டு, நேரடியாக பிளஸ் 1 ல் சேர்ந்து படிக்க முடியும்.அதே போல் 10 ம் வகுப்பு முடித்துவிட்டு, இரண்டு ஆண்டுகள் ஐ.டி.ஐ.,யில் படித்துவிட்டு உயர் படிப்பு படிக்க நினைக்கும் போது, அவர்கள் பிளஸ் 2 முடித்தவர்களாக கணக்கில் கொள்ளப்படுவார்கள். அவர்கள் நேரடியாக இன்ஜினியரிங், பட்டப்படிப்பில் சேர்ந்து படித்து கொள்ள முடியும்.இந்த திட்டத்தினை வரும் ஜூலை 15 ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு செய்யவுள்ளார்.தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.



 68 ஆண்டுகளாக ஐ.டி.ஐ., படித்து வரும் மாணவர்களுக்கு, உயர் கல்விக்கு செல்லும் போது, ஐ.டி.ஐ., படிப்பதற்கு முன்பு படித்த எட்டாம் வகுப்பு படித்திருந்தார் என்றால், மீண்டும் ஒன்பதாம் வகுப்புதான் சேர முடியும். பத்தாம் ' வகுப்பு படித்தவர், ஐ.டி.ஐ., படித்திருந்தால், மீண்டும் அவர் உயர்கல்வி பயில வேண்டும் என்றால் பிளஸ் 1 படிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனை மாற்றம் செய்து அரசு புதிய திட்டத்தினை செயல்படுத்தவுள்ளது என, அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement