Ad Code

Responsive Advertisement

1ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 'காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளியில் 1ம் வகுப்பில் சேரும் மாணவ, மாணவியரை மரியாதையுடன் நடத்த வேண்டும்; அரசு பள்ளியில் மாணவரை சேர்க்கும் பெற்றோரை பாராட்ட வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.


பள்ளி திறந்த நாளான நேற்று, காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மேட்டுக்குப்பம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், 1ம் வகுப்பு சேர்ந்த மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகம் கவுரப்படுத்தியது.
மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள், ஏழு மாணவியர், மேட்டுக்குப்பம் பள்ளியில் 1ம் வகுப்பில் நேற்று சேர்ந்தனர். காலை, 9:00 மணிக்கு, மாணவர்கள் அனைவரும் கிராம கோவிலில் கூடினர்.


அவர்கள் 10 பேருக்கும் மாலையிட்டு, ஊர்வலமாக பள்ளி வரை, பள்ளி ஆசிரியர்கள் அழைத்து வந்தனர்; அவர்களுடன் வந்த மாணவர்களின் பெற்றோரும் பாராட்டப்பட்டனர். இந்த புதுமையான முயற்சியை, அப்பகுதியினர் பாராட்டினர்.
கடந்த ஆண்டு சீர்வரிசை
கடந்த ஆண்டு, காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முசரவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கல்வி சீர்வரிசை என்ற பெயரில், சீர்வரிசை பொருட்கள் கொண்டு சென்று, பள்ளியில் மாணவர்களை சேர்த்தனர். அந்த நிகழ்ச்சி, அப்போது, மாவட்டம் முழுவதும் பேசப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement