Ad Code

Responsive Advertisement

FLASH NEWS : CPS ரத்து செய்யப்படும் - ஊதிய முரண்பாடு களையப்படும் - பள்ளிகளில் மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி - அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பரப்புரைக் கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். அதன் முதல்பிரதியை நாடாளுமன்ற துணை சாபநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பெற்றுக்கொண்டார்.

தமிழகம், புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களுக்கும் தனித்தனியான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

*  அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்..
* அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட முன்பணம் ரூ.40 லட்சம் வழங்கப்படும்..


*  சத்துணவில் காலை சிற்றுண்டி வழங்கப்படும்..

* கூட்டுறவு வங்கிகளுக்கு விவசாயிகள் வழங்கவேண்டிய பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்



* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்

* அரசு கேபிள் டிவி சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் விலையில்லா செட் ஆப் பாக்ஸ்

* தமிழகத்தின் அனைத்து குடும்ப அட்டைதரார்களுக்கும் விலையில்லா கைபேசி

* தாலிக்கு ஒரு சவரன் தங்கம் வழங்க நடவடிக்கை

* மகளிருக்கு பயிற்சியுடன் ஆட்டோ வாங்க மானியம்

* பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி

* தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைக்க நடவடிக்கை

* 2016-2021 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்

* விவசாயிகளுக்கு முழுவட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்

* மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம்

* பொங்கல் திருநாளுக்கு ரூ.500 மதிப்புள்ள ஆப்டெக்ஸ் கூப்பன்

* ஏழை எளிய மக்களுக்கு அரசின் அனைத்து சேவைகளையும் பெற அம்மா வங்கி அட்டை வழங்கப்படும்


*காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு முழுவதுமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை


* மீனவர் நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்

* மீனவர்களுக்கு தனி வீடு, மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

* மீன்பதன பூங்காக்கள் தொடர்ந்து அமைக்கப்படும்

* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது

* வணிகர் நலன் தொகுப்பு நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்

* பத்திரப்பதிவு எளிமைப்படுத்தப்படும்

*மகப்பேறு உதவித் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்

* முல்லைப் பெரியாறு அணி 152 அடியாக உயர்த்தப்படும்

* மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய சேவை

* நூறு யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் கட்டணமில்லை
* வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement