தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாநில அரசுகள் நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்றும் தனியார் கல்லூரிகள் நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்ற விசாரணையின் போது விளக்கம் அளித்தது.
அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வழக்குரைஞர் விகாசிங் தனது விளக்கத்தை எடுத்துரைத்தார்.
அதில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் நுழைவுத் தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது. அனைத்து மாணவர்களையும் 2-ம் கட்ட மருத்துவ தேர்வுக்கு அனுமதிக்க முடியாது என்று விளக்கம் அளித்தார். மாநிலங்களில் அரசு கல்லூரிகள் தவிர பிற கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு முறையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்கில் தகவல் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் மாநில அரசுகள் கலந்தாய்வு முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் உச்சசநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நுழைவுத்தேர்வு வழக்கு விசாரனை வரும் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை