Ad Code

Responsive Advertisement

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு பதிவு தொடங்கியது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது தபால் ஓட்டுக்களை இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை பதிவு செய்யலாம். தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஆரம்ப சுகாதார ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டள்ளனர்.


போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று முதல் தபால் ஓட்டுக்களை போடலாம்.சென்னையில் 16 தொகுதிகளிலும் உள்ள 3,770 வாக்குச்சாவடிகளில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பணியில் உள்ளனர். இதைதவிர 16 ஆயிரம் போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் செய்துள்ளார்.


அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலகங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்களிலேயே அவர்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக போலீஸ் பாதுகாப்புடன் தனி அறை உருவாக்கப்பட்டுள்ளது. தபால் ஓட்டுக்கான படிவம் 12-ஐ பூர்த்தி செய்து பயிற்சி அலுவலர்கள் மூலமாக அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளை 14-ந் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் கூறும் போது, “தபால் ஓட்டுக்களை போடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு பதிவுக்கு முந்தைய நாளான 15-ந் தேதி அன்று இரவே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் வாக்குபதிவு மையங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement