Ad Code

Responsive Advertisement

கேலி, கிண்டல் மீம்ஸ் மக்களே... சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகள், தேர்தல் ஆணையம் உங்களைக் கண்காணிக்கிறது!

தேர்தல் நேரத்தில் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளுக்கு கடிவாளம் இல்லாமல் இருப்பதால் அது குறித்து உரிய தீர்வு காண, தேர்தல் ஆணையத்துக்கு புகார்களும், வேண்டு கோள்களும் இடைவிடாமல் வந்து கொண்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் அதில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.


தமிழக தேர்தல் ஆணையம் இனி என்னென்ன செய்யும், இப்போது என்னென்ன செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.



அதில், "தேர்தல் குறித்த விமர்சனங்கள் மற்றும் தனிநபர் விமர்சனங்கள் செய்வது, கேலியான படங்கள், வீடியோ, ஆடியோக்களை வெளியிடுதல், தேர்தல் விதிமுறைகளை மீறுதல் குறித்து தேர்தல் ஆணையம் விரிவான கண்காணிப்பை ஏற்படுத்தி உள்ளோம்.



பணம், மது, பரிசு கூப்பன்கள் வழங்குவது போன்ற புகார்கள் மீதும், வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல் போன்ற புகார்கள் மீதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.



சமுக வலைதளத்தின் முக்கியத்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இதை கவனத்தில் கொண்டு முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை ( ஊடகங்களை ) கண்காணிக்க 'க்யூசெண்ட் பல்ஸ்' என்ற மென்பொருளை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகம் பிரத்யேகமாக வடிவமைத்துக் கொடுத்துள்ளது.



சமூக வலைதளத்தின் தகவல்களை கேட்பது, கண்காணிப்பது, ஆராய்வது என பலவற்றிற்கு ‘க்யூசெண்ட் -பல்ஸ்' பயன்படும். இந்த மென்பொருள் மூலம், 100 சதவீதம் வாக்களிப்பு என்ற குறிக்கோளை தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலகம் சமூக வலைதளங்களில் பிரசாரமாய் கொண்டு போயுள்ளது.



இந்த வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள் மற்றும் புகார்களை கேட்டு, ஆராய்ந்து உடனுக்குடன் அந்த தகவலை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்ப இந்த மென்பொருள் பயன்படும்.



சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகள், தேர்தல் ஆணைய அலுவலக கணினிக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். பின்னர், அந்த பதிவின் தன்மைகளான, சாதகம், பாதகம், எதிர்மறை, மிகவும் மோசம் போன்ற தன்மைகளின் கீழ் கொண்டு வரப்படும்.



கேட்டகரி (தன்மை ) 1, 2, 3, 4, 5 என்ற வகையின் கீழ் புகார்கள் வரிசைப்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை ரீதியிலான அதிகாரிகளுக்கு உடனே, ''மேல் நடவடிக்கை- அவசரம்'' என்ற அடிப்படையில் அனுப்பி வைக்கப்படும்.



மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரி, இணை தேர்தல் அதிகாரி, மாவட்டங்களின் தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரி என உரிய அதிகாரிகளின் கவனத்துக்கும் இவைகள் அனுப்பப்படும். அனைத்து புகார்களையும் பார்வையிட ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட தகவல் பலகை கணினியில் வழங்கப்படும்.



எதை செய்தாலும் பார்த்து செய்யுங்கப்பா...!'

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement