பணியில் இருந்து விலகிய நீதிமன்ற ஊழியருக்கு மீண்டும் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையைச் சேர்ந்த எம்.முகமது அக்பர் பாஷா. இவர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரவு காவலாளியாக பணியில் சேர்ந்தார். பின்னர், அலுவலக உதவியாளராகப் பதவி உயர்வு பெற்றார்.
இவர் விடுமுறை நாள்களிலும் வீட்டு வேலை செய்ய நீதிபதிகள் பணித்தாகக் கூறி 2014-ஆம் ஆண்டு ஜனவரி 31-இல் பணி விலகல் கடிதம் அளித்துள்ளார். இந்த நிலையில், குடும்பச் சூழல்-மன உளைச்சல் காரணமாக பணி விலகியதை கருத்தில் கொண்டு மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முகமது அக்பர் பாஷா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது நீதிபதிகள் சதிஷ் கே.அக்னிஹோத்ரி, எம். வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-
பணி விலகிய ஒருவருக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக சட்டத்தில் இடமில்லை. மனுதாரர் இதே கோரிக்கையை வலியுறுத்தி, தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்திலும் முறையிட்டுள்ளார். எனவே, அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை