Ad Code

Responsive Advertisement

பாரதியார் பல்கலையில் எம்.எட்., சேர்க்கை மந்தம்

பாரதியார் பல்கலையில் எம்.எட்., படிப்பில் சேர்க்கைபுரிய பி.எட்., மட்டுமின்றி, ஆசிரியர் பட்டயப்படிப்புடன் ஏதேனும் இளங்கலை முடித்தவர்களும் தகுதியானவர் என்ற நிலையில், இதுவரை ஒருவர் கூட சேர்க்கைபுரியாதது ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாரதியார் பல்கலையில் எம்.எஸ்.சி., எம்.காம்., எம்.ஏ., எம்.எட்., பி.பி.எட்., என, 30க்கும் மேற்பட்ட முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.


இப்படிப்புகளில், கடந்த ஏப்., 27ம் தேதி முதல் வரும், 20ம் தேதி வரை நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது. பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்கு கடுமையான போட்டி நிலவுவது வழக்கம்.ஆனால், பி.எட்., படிப்பை இரண்டாண்டுகளாக அதிகரித்ததன் மூலம் மாணவர்களிடையே பி.எட்., சேரும் ஆர்வம் சமீபகாலமாக குறைந்துவருகிறது. பல்கலையில், தொலைமுறைக் கல்வியில் பி.எட்., மற்றும் முழுநேர படிப்பில் இரண்டாண்டு எம்.எட்., படிப்பும் வழங்கப்படுகிறது.



எம்.எட்., படிப்புக்கு, பி.எட்., மட்டுமின்றி, ஆசிரியர் பட்டயப்படிப்புடன் ஏதேனும் இளங்கலை முடித்தவர்களும் தகுதியானவர்களாக உள்ளனர். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஒருவர் கூட எம்.எட்., படிப்புக்கு சேர்க்கை புரியாதது ஆசிரியர்களை கவலையடையச் செய்துள்ளது.



பல்கலை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பி.எட்., படிப்பை இரண்டாண்டுகளாக உயர்த்தியதால், இவ்வாண்டு இரண்டாமாண்டு படிக்கும் பி.எட்., மாணவர்கள், எம்.எட்., சேர வாய்ப்பில்லை. ஆசிரியர் பட்டயப்படிப்புடன் ஏதேனும் இளங்கலை படிப்பு முடித்தவர்களும் எம்.எட்., படிக்க தகுதியானவர்கள் என்ற விழிப்புணர்வு மாணவர்களிடம் இல்லை.



'இதனால், ஒருவர் கூட தற்போது விண்ணப்பிக்கவில்லை. மொத்தம் உள்ள, 35 இடங்களுக்கு வரும், 20ம் தேதி வரை சேர்க்கை நடப்பதால், ஆசிரியர் பட்டயப்படிப்புடன் ஏதேனும் இளங்கலை படிப்பு முடித்தவர்களும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement