Ad Code

Responsive Advertisement

மருத்துவ படிப்புக்கு இன்று நுழைவு தேர்வு: சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

மருத்துவப் படிப்புகளுக்கான, முதல்கட்ட பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான உத்தரவைமாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைவிசாரிக்க, சுப்ரீம் கோர்ட் நேற்று மறுத்துவிட்டது. இதனால், திட்டமிட்டபடி, இன்று தேர்வு நடக்கிறது.

இரண்டு கட்டமாக...

நாடு முழுவதும், 2016 - 17ம் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம்விசாரணை நடந்தது.அப்போது, பொது நுழைவுத் தேர்வை, மே, 1;ஜூலை, 24 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகநடத்த, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த உத்தரவை அடுத்து, நாடு முழுவதும் உள்ள, அனைத்து அரசு, நிகர்நிலை மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும். ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்படும். இந்நிலையில், சில மாணவர்கள் சார்பாக, சுப்ரீம் கோர்ட்டில், நேற்று, மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'குறைந்த அவகாசமே உள்ள நிலையில், பொது நுழைவுத் தேர்வுக்கு தயாராவது கடினம்; எனவே, இது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மாற்றியமைக்க வேண்டும். இம்மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை பரிசீலித்தது. பின், மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பொது நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கை, சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரணை நடத்தி, ஏற்கனவே தீர்ப்பு வழங்கி விட்டது. இவ்விஷயம், இத்துடன் முடிந்துவிட்டது. தீர்ப்பில் கூறப்பட்ட தேதிகளில், பொது நுழைவுத் தேர்வை, திட்டமிட்டபடி நடத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் வழக்கமான அமர்வு முன், மனு தாக்கல் செய்யலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
6.5 லட்சம் பேர்:
இந்த உத்தரவை அடுத்து, நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கானமுதல்கட்ட பொது நுழைவுத் தேர்வு, இன்று நடக்கவுள்ளது.அடுத்த கட்ட தேர்வு, ஜூலை, 24ல் நடக்கும். இத்தேர்வுகளில், 6.5 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.இந்த இரு தேர்வுகளும் முடிந்த பின், ஆகஸ்ட், 17ல், முடிவுகள் அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, செப்., 30ல், மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கை நடைமுறை நிறைவு பெறும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement