Ad Code

Responsive Advertisement

கால்நடை படிப்புகளுக்கு மே 8-இல் விண்ணப்பம்?

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் குறித்த அறிவிப்பு மே 8-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

நுழைவுத் தேர்வு:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு பொருந்தாது.

எனவே கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த ஆண்டுகளைப் போன்று கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். எனவே, மாணவர்கள் எந்தவித கலக்கமும் அடைய வேண்டாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ். திலகர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement