Ad Code

Responsive Advertisement

தபால் ஓட்டுகள் 61 சதவீதம் பதிவு

தமிழகத்தில் தபால் ஓட்டுப்பதிவு துவங்கிய முதல் நாளில், 61 சதவீதம் தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.தமிழகம் முழுவதும், தேர்தல் பணியில், 1.32 லட்சம் ஆண்கள்; 1.97 லட்சம் பெண்கள் என, மொத்தம், 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.



அவர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு, நேற்று முன்தினம் மாவட்டம்தோறும் நடந்தது. பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள், தபால் ஓட்டு போட, பயிற்சி முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மையத்தில் ஓட்டுப் போட விரும்பாதோர், தபால் மூலமாக ஓட்டை அனுப்பலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. சென்னை மாவட்டத்தில், 61 சதவீதம் தபால் ஓட்டுகள் பதிவாகின. இம்மாவட்டத்தில், 19,951 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.



இவர்கள் தவிர, போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் டிரைவர்கள், கிளீனர்கள் ஆகியோருக்கும் தபால் ஓட்டு வழங்கப்படஉள்ளது.நேற்று முன்தினம் பயிற்சி முகாம் நடந்த இடங்களில் எல்லாம், 60 சதவீதம் தபால் ஓட்டு பதிவாகி உள்ளது. கடைசி பயிற்சி வகுப்பு, 14ம் தேதி நடைபெற உள்ளது. அன்றும் ஓட்டு போட, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement