அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடந்த வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை அந்தந்த மாநில அரசுகளே நடத்த அனுமதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், மாநிலங்களின் மனுக்கள் மீதான இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கார்நாடக மாநிலம் மீதான விசாரணை இன்று நடத்தப்பட்டது. மற்ற மாநிலங்களுக்கான வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், AIPMT தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பது இல்லை. கடந்த, மே 1-ம் தேதி நடத்தப்பட்ட முதற்கட்ட நுழைவுத்தேர்வை 6 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வைஎதிர்கொண்டனர். அதில், தமிழக மாணவர்கள் 25,000 பேர் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. நுழைவுத்தேர்வுக்கு சிபிஎஸ்இ மாணவர்களே அதிகம் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை