Ad Code

Responsive Advertisement

இன்று பிளஸ் 2 'ரிசல்ட்' 'சென்டம்' குறைய வாய்ப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை, மதிப்பெண்ணுடன் இணையதளத்தில் காணலாம். தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது; 8.72 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இன்று காலை, 10:31 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை, மதிப்பெண்ணுடன் இணையதளத்தில் காணலாம். 


தேர்வர்கள் மே, 19ல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்; மே, 21 முதல், தாங்கள் படித்த அல்லது தேர்வு எழுதிய பள்ளியில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.



விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் மூலம், இன்றும், நாளையும் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.இந்த ஆண்டு, முதன்முறையாக பிளஸ் 2 தேர்வில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதனால், கடந்த ஆண்டை விட, 'சென்டம்' எண்ணிக்கை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



இணையதள முகவரி:தேர்வர்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் மூலம், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement