Ad Code

Responsive Advertisement

26 ஆயிரம் பேர் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினர்

தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை 26 ஆயிரம் பேர் எழுதினர்.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 நகரங்களில்தேர்வு நடைபெற்றது. பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் எழுதினர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் மின்ணணு சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதால் மறு தேர்வு நடத்தப்பட்டது. அதனால் இன்று நடைபெற்ற தேர்வில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தேர்வு எழுதியவர்கள் ஜூலை மாதம் நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்வில் பங்கேற்க இயலாது. இந்தநிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை (மே.3) வருகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement