Ad Code

Responsive Advertisement

164 இடங்களைப் பிடித்து அதிமுக மீண்டும் ஆட்சிஅமைக்கிறது: புதிய தலைமுறை

தமிழக சட்ட‌ப்பேரவைத்‌ தே‌ர்தலில் 164 இடங்களில் வெற்றி பெற்று அதிமு‌க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என புதிய தலைமுறை ஆப்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.



தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களாக ‌பிரித்து 200 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 4‌ஆயிரத்து 992‌ பேரி‌டம் கருத்து கேட்கப்பட்டது. அதன் முடிவுகளில், அதிமுக 164 இடங்களில் வெற்றி பெறும் என்றும், திமுக 66 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.


மற்ற கட்சிகளுக்கு 4 இடங்கள் ம‌ட்டுமே கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. எந்‌தக் கட்சி‌க்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு அதிமுகவுக்கு 38 பு‌ள்ளி 58 ‌சதவிகித‌ம் பேரும், திமுகவுக்கு 32 புள்ளி 11 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவி‌த்தனர். தேமுதிக கூட்டணிக்கு 8 புள்ளி 55 சதவிகிதமும், பாமகவுக்கு‌ 4.47 சதவிகிதமும், நாம் தமிழ‌ர் கட்சிக்கு 2 புள்ளி 12 சதவிகிதமும் ‌ஆதரவு தெரிவிக்கப்பட்டது.‌‌


பா‌ர‌திய ஜனதா 1 புள்ளி 96 சதவிகிதமும், தெரியாது என்று 8 புள்ளி 45 சதவி‌தமு‌ம் பதிலாகக் கிடைத்தன. எந்தக் கட்சி நிலையான ஆட்சியைத் தரும் என்ற கே‌‌ள்விக்கு, ஆய்வில் பங்கேற்றவர்களில் 37 புள்ளி 96 சதவிகிதத்தினர் அ‌திமுகவை தேர்வு செய்‌தனர். 3‌1 புள்ளி 33 சதவிகிதம் பேர்‌ திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.


தேமுதிக கூட்டணிக்கு 7 புள்ளி 67 ச‌தவிகிதமும், பாமகவுக்கு 4 புள்ளி 27 சதவிகிதமும் ‌ஆதரவு கிடைத்தது.எனினு‌ம், மீண்டும் ஆட்சி ‌அமைக்க அதிமுகவுக்கு வாய்ப்பளிப்பீர்களா என்ற கேள்விக்கு 51 புள்ளி 68 சதவிகிதம் பேர்‌ இல்லை என்றும், 42 புள்ளி 69 சத‌விகி‌தத்தினர் ஆம் என்றும் பதிலளித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement