Ad Code

Responsive Advertisement

பொது நுழைவுத் தேர்வுக்கான தடை பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை.

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, பொது நுழைவுத் தேர்வுக்கான தடையை தொடர, புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா, கவர்னருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2008ம் ஆண்டு மத்திய அரசு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்தி, மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கை நடத்த முயன்றது. அதை எதிர்த்து ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, நுழைவு தேர்வுக்கு கோர்ட் தடை விதித்தது.இந்நிலையில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்திற்கு, நுழைவு தேர்வுக்கான தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது. இதனால், பின்தங்கிய ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்டுவர்.


புதுச்சேரியில் உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கான 69 சதவீத ஒதுக்கீடு பாதிக்கப்படும். ஏற்கனவே புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 23 இடங்களும், மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரியில் 6 இடங்களும் மத்திய அரசுக்காக ஒதுக்கப்படுகிறது.எனவே, புதுச்சேரி அரசு, சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ள தடை ஆணையை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement