Ad Code

Responsive Advertisement

வாக்குப் பதிவு தினத்தன்று சம்பளத்துடன் விடுமுறை

சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான மே 16-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.  1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 135பி பிரிவின் அடிப்படையில், தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட), உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி-சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது.
 


இது தினக்கூலி, தாற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும். இந்த அறிவிப்பை தொழிலாளர் நலத் துறையின் ஆணையர் பெ.அமுதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement