Ad Code

Responsive Advertisement

7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும்; ரிசர்வ் வங்கி

7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.இதன் காரணமாக நிகர உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 0.40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும்கூறியுள்ளது. அதே நேரத்தில் சில்லரை பணவீக்க விகிதம் 5 சதவீதத்துக்குள் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.2016-17 நிதியாண்டின் இரண் டாவது காலாண்டில் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.


ஜிடிபி அதிகரிக்க வாய்ப்பு: இதன் காரணமாக நுகர்வோர் விலை குறியீடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் பிரதிபலிப்பு அடுத்த 24 மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்ப்பதாக ரகுராம் ராஜன் கூறினார். மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பதால், 1லட்சம் கோடி அளவிற்கு பணபுழக்கம் ஏற்படும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதனால் விலைவாசி உயரும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement