Ad Code

Responsive Advertisement

இரண்டு நாட்களில் 40 ஆயிரம் பேர் இன்ஜி., படிக்க விண்ணப்பம்.

பொறியியல் படிப்புகளில் சேர, இரண்டு நாட்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 570 கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலை மூலம் ஒற்றை சாளர முறையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைன் விண்ணப்ப முறையை, அண்ணா பல்கலை அறிமுகம் செய்துள்ளது.



ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஏப்ரல், 15ல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரே நாளில் லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்க முயன்றதால், தொழில்நுட்ப கோளாறால் இணையதளம் முடங்கியது. இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, 16ம் தேதி முதல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. முதல் நாளில், 25 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இரண்டாம் நாளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். இ - சேவை மையங்களிலும், ஆன்லைன் பதிவு செய்யப்படுகிறது. பதிவு குறித்த சந்தேகங்களுக்கு, அண்ணா பல்கலையின், 60க்கும் மேற்பட்ட உதவி மையங்கள் செயல்படுகின்றன. 

இதுகுறித்து, அண்ணா பல்கலை கவுன்சிலிங் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஆன்லைன் பதிவு இந்த ஆண்டு தான் துவங்கியுள்ளதால், எந்த சந்தேகமாக இருந்தாலும், பல்கலையின் தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் பிரிவை, 044 -2235 8041, 42, 43, 44 ஆகிய எண்களில், காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம். மேலும், tneaenq2016@annauniv.edu என்ற இ - மெயில் முகவரிக்கு, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் சந்தேகங்களை கேட்டு கடிதம் அனுப்பலாம். விண்ணப்பகட்டணத்தை, ஆன்லைனில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, ரசீது வராவிட்டாலும் குழப்பம் தேவையில்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement