Ad Code

Responsive Advertisement

3 பாடங்களுக்கு 'போனஸ் மார்க்'

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது. வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியலுக்கு,மொத்தம், 14 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்பட்டு உள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று துவங்கியது.

முதல் நாளில், தலைமை திருத்துனர்கள் மற்றும் துறை அலுவலர்கள் மூலம், மாதிரிக்காக ஒவ்வொரு அறையிலும், தலா, 15 விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டன. நாளை முதல், உதவி விடை திருத்துனர்கள், முழு அளவில் திருத்தும் பணியில் ஈடுபடுவர்.வினாத்தாளில் ஏற்பட்ட பிழை காரணமாக, வேதியியலில், ஆறு மதிப்பெண்; கணிதத்தில், தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டும், ஆறு மதிப்பெண்; இயற்பியலில், தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டும், இரண்டு மதிப்பெண், 'போனஸ்' மதிப்பெண்களாக வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளதுமூன்று பாட தேர்வுகளிலும், சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் எழுத முயற்சித்திருந்தால் மட்டுமே, போனஸ் மதிப்பெண் வழங்கப்படும்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement