Ad Code

Responsive Advertisement

பிற பாடங்களுக்கு இன்று முதல் மதிப்பீடு பிளஸ்2 மொழிப்பாட விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

தமிழகம் புதுவையில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர்.  விடைத்தாள் திருத்தும் பணி தற்போது நடக்கிறது. 


இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களில் கடினமான கேள்விகள் இடம் பெற்றிருந்ததாகவும், கடினமான கேள்விகளுக்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் கூறினர். வேதியியல் பாடத்திற்கு மட்டும் கடினமான கேள்விகளுக்கு மாணவ, மாணவிகள் பதில் எழுத முயற்சித்திருந்தால் 6 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 


இதற்கிடையே தமிழ் மற்றும் ஆங்கிலப்பாட விடைத்தாள் திருத்தும் பணி அனைத்து மையங்களிலும் நிறைவு பெற்றது. மதிப்பீடுகள் விவரம் உடனுக்குடன் கணினியில் ஏற்றப்பட்டு கல்வித்துறை பார்வைக்கு அனுப்பப்படுகிறது. பிற பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று (4ம் தேதி) தொடங்குகிறது. இப்பணிகளை வரும்  20ம் தேதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில்  மே 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. 


இது தொடர்பாக ஆசிரியர்களுக்கு விரைவில்  பயிற்சி முகாம்கள் நடக்க உள்ளன. எனவே, இதற்கு இடையூறு இல்லாமல் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை நிறைவு செய்து மே முதல் வாரத்தில் பிளஸ்2 ரிசல்ட் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோல் 10ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணியை வரும் 15ம் தேதி தொடங்கி விரைவாக முடித்து தேர்தலுக்கு முன்னதாக ரிசல்ட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement