பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், மதிப்பெண் பதிவு மற்றும், இரண்டு முறை வழங்கப்பட்ட, 'கீ ஆன்சர்' எனப்படும் விடைக் குறிப்புகளால், குளறுபடி ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில், மொழிப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து விட்டது. ஏப்., 7ல் முக்கிய பாடங்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது.
சென்னையில், நான்கு மையங்கள் உட்பட மாநிலம் முழுவதும், 32 மையங்களில் இப்பணி நடந்து வருகிறது. இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுக்கு மட்டும் போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன முதல் நாள் விடை திருத்தும் பணியின் போது ஏற்பட்ட சந்தேகங்களுக்கு பின், 'கீ ஆன்சர்' மாற்றப்பட்டு, புதிய, 'கீ ஆன்சர்' வழங்கப்பட்டுள்ளது ஏற்கனவே திருத்தப்பட்ட விடைத்தாள்களை புதிய, 'கீ ஆன்சர்' அடிப்படையில், மீண்டும் திருத்தவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதனால், மதிப்பெண் மாறுபடுகிறது புதிய, 'கீ ஆன்சர்' பல மையங்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. பல இடங்களில் பழைய, 'கீ ஆன்சர்' மூலமே திருத்துகின்றனர். அதனால், மதிப்பெண் வழங்குவதில் வேறுபாடு காணப்படுகிறது
உயிரி - விலங்கியல் மற்றும் தாவரவியல் பாடத்துக்கு, இரண்டு விடைத்தாள்களை ரத்து செய்து விட்டு, ஒரே விடைத்தாளில், இரண்டு பிரிவாக மாற்றியுள்ளனர். அதனால், ஒரே முகப்புத்தாளில் தனித்தனியே தாவரவியல் மற்றும் விலங்கியல் மதிப்பெண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆனால், தாவரவியல் மதிப்பெண்ணை விலங்கியலிலும், விலங்கியல் மதிப்பெண்ணை தாவரவியலிலும் பதிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. விடைத்தாளில், மதிப்பெண்ணில் அடித்தல், திருத்தல் செய்யக் கூடாது என்பதால், இந்த பிரச்னையை சரி செய்வதில் தேர்வுத் துறைக்கு சிக்கல் எழுந்து உள்ளது.
கடினமாக உள்ளது: பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு, வினாத்தாள் கடினமாக இருந்தது போல், 'கீ ஆன்சர்' எனப்படும் விடைக் குறிப்பும், கடினமாக வழங்கப்பட்டுள்ளது. பல விடைகளுக்கு மாணவர்கள் சரியாக எழுதினாலும், அவற்றுக்கு குறைந்த மதிப்பெண்ணே கிடைக்கும் என தெரிய வந்துள்ளது. பாட புத்தகத்தில் உள்ளதுபோல், கூடுதல் தகவல்கள் இருந்தால் மட்டுமே முழு மதிப்பெண் வழங்கும் வகையில், படிப்படியாக ஒவ்வொரு, 'பாயின்ட்' வாரியாக, மதிப்பெண் குறிப்பிடப்பட்டுள்ளது 'டயக்ராம்' எனப்படும் படங்களுக்கான மதிப்பெண், பாதியாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றங்களால், 'சென்டம்' எண்ணிக்கை, பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை