தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால், அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நடக்கும் விழாக்களுக்கு, அரசியல் கட்சியினரை அழைக்க, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல், மே 16ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு, மார்ச் 4ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே, அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நடைபெறும் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா போன்றவற்றுக்கு, அரசியல் கட்சியினரை அழைக்கக்கூடாது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. அரசு கல்லுாரிகளில், பட்டமளிப்பு விழாவில், மாணவ, மாணவியருக்கு, கல்லுாரி முதல்வரே, பட்டங்களை வழங்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கர்ப்பிணிகளுக்கு விலக்கு:சட்டசபை தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் உடல்நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு, தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை