அனைத்து நோய்களையும் தீர்க்கும் கற்பக மரமாக திகழும் வேப்பிலையின் இலை மற்றும் பூவிலிருந்து எடுக்கப்பட்டதாவர வேதிப்பொருளான நிம்போலைடூ வாய்ப்புற்று நோயை குணமாக்கும் சக்தி கொண்டது என அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.இன்றளவில், வாய்ப்புற்று நோய்க்கு பல்வேறு சிகிச்சைகள் இருப்பினும் புற்று நோயாளிகளின் வாழ்நாள் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், உயிர் வேதியியல் மற்றும் உயிர் தொழில் நுட்பவியல் துறையை சேர்ந்த பேராசிரியர் நாகினி மற்றும் அவரது ஆராய்ச்சி குழுவானது வெள்ளெலியை பயன்படுத்தி வாய்ப்புற்று நோயின் போது ஏற்படும் தோலிமம் மாற்றத்தை விளக்கி உள்ளனர்.இந்த ஆராய்ச்சி குழுவானது, நிம்போலைடூ புற்று நோய் செல்லை கொல்வதன் மூலமும் மற்றும் அதன் வளர்ச்சிப் பெருக்கத்தை தடுப்பதின் மூலமும் வாய்ப்புற்று நோயை தடுப்பதாக நிருபித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி கட்டுரையானது Scientific reports எனும் ஆராய்ச்சி பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவில், வேப்பிலையின் புற்று நோய் எதிர்ப்பு செயல்பாடு குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மனித மருத்துவ சோதனையின் பின் நிம்போலைடூ வாய்ப்புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தத்தக்கது என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை