ஆசிரியர் பயிற்சி மையங்களில், காலியாக உள்ள, 222 விரிவுரையாளர் பணி தேர்வுக்கான பாடத் திட்டத்தை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ், மாவட்டந்தோறும், 'டயட்' எனப்படும், மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஆசிரியர் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில், பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியும், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, டிப்ளமோ ஆசிரியர் பயிற்சிபடிப்பும் நடத்தப்படுகின்றன.
'இங்கு, காலியாக உள்ள, 222 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்படும்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், வரலாறு, புவியியல், உடற்கல்வியியல் மற்றும்தெலுங்கு ஆகிய பாடங்களில், விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இது குறித்த விரிவான அறிவிக்கைஏப்ரலில் வெளியிடப்படும். இதற்கிடையில், தேர்வுக்கான பாடத் திட்டத்தை, http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை