வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்குமாறு, நிதியமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெ ளியாகியுள்ளன. இதனையடுத்து இது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் பார்லிமென்டில் வெ ளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்லிமென்டில், பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். 'தொழிலாளர்கள் ஓய்வு அடையும்போது பெறும், இ.பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எப்., தொகையில், 60 சதவீதத்தின் மீது ஓய்வுக்கால வரி விதிக்கப்படும்' என, பட்ஜெட்டில் கூறப்பட்டது.இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இ.பி.எப்., தொகைக்கான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் எடுக்க வேண்டும் என எம்.பி.,க்கள் கூட்டத்தில்ஜெட்லி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், பி.எப்., வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்த வேண்டும் எனவும், நிதியமைச்சகத்துக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று, தனது அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர், இது தொடர்பான அறிவிப்பை ஜெட்லி பார்லிமென்டில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் தலையிட்டின் மூலம், 60 லட்சம் ஊழியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை