தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 'வாட்ஸ் ஆப்' மொபைல் போன் எண் மற்றும் 'மொபைல் ஆப்ஸ்' அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழகத்தில், தேர்தல் விதிமீறல் குறித்துபுகார் தெரிவிக்க, வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் தொடர்பான சந்தேகங்களை,பொதுமக்கள் அறிந்து கொள்ள, கட்டணமில்லா டெலிபோன் எண்,1950 அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கைஇந்த எண்ணில், நேற்று முன்தினம் மாலை வரை, 310 புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்றுள்ளன. மேலும், பொதுமக்கள் வசதிக்காக, 'வாட்ஸ் ஆப் எண்' 94441 - 23456 அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த எண், 'வாட்ஸ் ஆப்' தகவலுக்காக உருவாக்கப்பட்டு உள்ளது.மேலும், தேர்தல் கமிஷன் இணையதளம் (www.tn.elections.gov.in) மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். இதுதவிர, ceo@tn.gov.in என்ற இ - மெயில் முகவரிக்கும், புகார்களை அனுப்பலாம்.
பொதுமக்கள் அனுப்பும் புகார்கள் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றின் விவரம், இணையதளத்தில் வெளியிடப்படும்.இதுதவிர, வாக்காளர்கள் நலன் கருதி, ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்தக்கூடிய புதிய, 'மொபைல் ஆப்ஸ்' உருவாக்கப்பட்டு உள்ளது. இதை பெற விரும்புவோர், கூகுள் பிளே ஸ்டோரில் சென்று, TN elections என்ற, 'ஆப்சை' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
'மொபைல் ஆப்சில்' இதன்மூலம், வாக்காளர்கள் தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம். இந்த, 'மொபைல் ஆப்சில்' பத்திரிகைகளுக்கு அனுப்பப்படும் செய்திக் குறிப்புகளும் வெளியிடப்படும். ஆப்பிள் மொபைலில் பயன்படுத்தக்கூடிய, 'மொபைல் ஆப்ஸ்' விரைவில் வெளியிடப் படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை